தையிட்டி விகாரை சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருக்குமாயின் அதற்காக அரசாங்கம் மேற்கொள்ளவுள்ள நடவடிக்கை தொடர்பில் இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் கேள்வி எழுப்பினார்.
வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் அவர் இந்த கேள்வியை முன்வைத்தார்.
தங்களின் காணியைக் கோரி போராட்டங்களை முன்னெடுத்து வரும் காணி உரிமையாளர்களுக்கு அரசாங்கம் முன்வைக்கும் தீர்வு தொடர்பிலும் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் வினவியிருந்தார்.
இதற்குப் பதிலளித்த புத்தசாசன,சமய மற்றும் கலாசார அலுவல்கள் விவகார அமைச்சர் ஹினிதும சுனில் செனவி, இந்த விடயம் தொடர்பில் காணி அமைச்சு உள்ளிட்ட பல நிறுவனங்களிடம் இருந்து தகவல் சேகரிக்கப்பட வேண்டியுள்ளதனால் தமக்குக் கால அவகாசம் வழங்குமாறு கோரினார்.