மட்டக்களப்பு பட்டிருப்பு தேற்றாத்தீவு மகா வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி பாடசாலை விளையாட்டு மைதானத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை வித்தியாலய முதல்வர் த.தேவராசா தலைமையில் நடைபெற்றது.
இதன்போது நாவலர், புலவர்மணி, விபுலானந்தர் என 3 இல்லங்களாக பிரிக்கப்பட்டு மாணவர்களின் திறனாய்வு போட்டிகள் இடம்பெற்றன.
மேலும் அதிதிகள் மலர்மாலை அணிவித்து பாண்டு வாத்தியங்கள் முழங்க வரவேற்கப்பட்டு தேசியக்கொடி, பாடசாலை கொடி, இல்லக்கொடிகள் ஏற்றப்பட்டு பின்னர், இறைவணக்கம், ஒலிம்பிக் தீபம் ஏற்றுதல், மாணவர்களின் உடற்பயிற்சி கண்காட்சி, நிகழ்வை அலங்கரித்தன. மாணவர்களின் அணிநடை மரியாதை, சுவட்டு அஞ்சல் நிகழ்ச்சிகள், அதிதிகள் உரை, மாணவர்களுக்கான சான்றிதழ்களும் வெற்றி கேடயங்களும் வழங்கி வைக்கப்பட்டது.
நிகழ்விற்கு பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபரும், மாவட்ட செயலாளருமான ஜஸ்ரினா யுலேக்கா முரளிதரன், சிறப்பு அதிதியாக பட்டிருப்பு கல்வி வலய கல்விப் பணிப்பாளர் சி.சிறீதரன் கலந்து சிறப்பித்தார்.





