தேசிய மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டது கல்முனை ஸாஹிரா

 

மட்டக்களப்பு வெபர் உள்ளக அரங்கில் இம்மாதம் 9ம் திகதி மற்றும் 10ம் திகதிகளில்  நடைபெற்ற கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான கைப்பந்து (Handball) போட்டியில் 17 வயதுக்குட்பட்ட பிரிவில் கல்முனை ஸாஹிரா கல்லூரி அணி 2ம் இடத்தைப் பெற்று தேசிய மட்டப் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டதுடன், 20 வயதிற்கு உட்பட்ட அணி 4ம் இடத்தினையும் பெற்றுக்கொண்டது.

இவ்விளையாட்டை பாடசாலையில் அறிமுகப்படுத்தி பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர் எம்.வை.எம்.றகீப், மாணவர்களுக்கு பயிற்சி அளித்து அழைத்துச் சென்ற உடற்கல்வி ஆசிரியர்களான எம்.எம்.றஜீப், எச்.எம்.ஜெமீன் மற்றும் விளையாட்டு பயிற்றுவிப்பாளர் ஏ.எம்.ஜப்ரான் போட்டியில் பங்குபற்றிய மாணவர்கள், பங்கு பற்றி திறமைகளை வெளிப்படுத்தி வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்வதாக கல்லூரி முதல்வர் எம்.எச். ஜாபீர் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டு போட்டி வரலாற்றில் முதல் முறையாக கைப்பந்து போட்டி நடைபெற்றது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்