தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவகத்தின் ஊடாக, மருத்துவ சான்றிதழ் வழங்கும் செயற்பாடு எதிர்வரும் இரண்டு நாட்களுக்கு முன்னெடுக்கப்படமாட்டாது என இந்நிறுவகம் தெரிவித்துள்ளது.
அதன்படி, நாளை வெள்ளிக்கிழமை மற்றும் நாளை மறுதினம் சனிக்கிழமை ஆகிய இரண்டு நாட்களும் குறித்த சேவைகள் முன்னெடுக்கப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மறு அறிவித்தல் வரை இந்நடைமுறை அமுலில் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், கைப்பேசியிலிருந்து 225 என்ற இலக்கத்திற்கும், நிலையான தொலைபேசியிலிருந்து 1225 என்ற இலக்கத்திற்கும் தொடர்பு கொள்வதனூடாகவோ அல்லது www.ntmi.lk என்ற இணையத்தளத்துக்கு பிரவேசிப்பதன் மூலமோ வெள்ளி, சனிக்கிழமைகளை தவிர்ந்த ஏனைய நாட்களில் நேரத்தை முன்பதிவு செய்து, நேரில் வருகை தருவதன் மூலம் துரித சேவையை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், e-channeling செயலி மூலமும் இச்சேவைi பெற்றுக்கொள்ள முடியும் என தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவகம் தெரிவித்துள்ளது.