தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் அசமந்த போக்கு : மக்கள் விசனம்

-மன்னார் நிருபர்-

மன்னார் தாழ்வுபாடு – எமில் வீதியில் வீதியோரமாக காணப்பட்ட மன்னார் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் குடிநீர் விநியோக குழாயில் வெடிப்பு ஏற்பட்டு கடந்த மூன்று தினங்களுக்கு மேலாக நீர் விரயாமாகிக் கொண்டிருக்கும் நிலையில் இதுவரை மன்னார் தேசிய நீர் வளங்கள் வடிகாலமைப்பு சபை எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

குறித்த பகுதியில் மன்னார் தேசிய நீர் வளங்கள் வடிகாலமைப்பு சபையின் நீர் இணைப்பு காணப்படுகிறது.

குறித்த இணைப்பில் வெடிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் நீர் வெளியேறிய நிலையில் காணப்படுகின்றது.

தற்போது வெடிப்பு ஏற்பட்டு நீர் வெளியேறும் பகுதியில் பாரிய பள்ளம் ஒன்று ஏற்பட்டுள்ளது.

சிறுவர்களின் நடமாட்டம் காணப்படும் வீதி என்பதினால் அனர்த்தங்கள் ஏற்படும் நிலை உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்விடயம் தொடர்பாக மன்னார் தேசிய நீர் வளங்கள் வடிகாலமைப்பு சபையின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

எனினும் மூன்று தினங்களாகியும் மன்னார் தேசிய நீர் வளங்கள் வடிகாலமைப்பு சபையினர் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை.

தற்போது அதிக அளவில் நீர் வெளியேறி அருகில் உள்ள வீடுகளுக்குள் நீர் சென்றுள்ளதோடு, அப்பகுதியில் உள்ள வீதிகளில் நீர் தேங்கியுள்ளது.

எனவே, உடனடியாக மன்னார் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினர் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.