தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் போக்குவரத்து தடைபட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை பொது மக்களுக்கு அறிவித்துள்ளது.
குறித்த நெடுஞ்சாலையில் தொடங்கொடை மற்றும் களனிகம இடையே 20.7 கிலோ மீற்றர் துாணுக்கு அருகில் மாத்தறையிலிருந்து கொட்டாவை நோக்கி பயணித்த லொறி ஒன்று வீதியில் கவிழ்ந்து வீதி முற்றாக மூடப்பட்டுள்ளதால் குறித்த வீதி ஊடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே மாத்தறையிலிருந்து பயணிக்கும் வாகனங்கள் அனைத்தும் தொடங்கொடையில் வெளியேறி மத்துகம-களுத்துறை வீதியில் பயணித்து களனிகம ஊடாக மீண்டும் அதிவேக நெடுஞ்சாலைக்குள் நுழைய முடியும் எனவும் காலி வீதி ஊடாகவும் கொழும்பு நோக்கி பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.