தென்மேற்கு பருவமழை சுறுசுறுப்பாக நிலவுவதால், நாட்டின் பல பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாளை (01) காலை 11.00 மணி வரை அமலில் இருக்கும் இந்த எச்சரிக்கையின்படி, மேல், சபரகமுவ, மத்திய, தெற்கு, வடமத்திய, வடமேல் மாகாணங்களிலும், திருகோணமலை மாவட்டத்திலும் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, 15 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும், 07 மாவட்டங்களுக்கு மஞ்சள் (எச்சரிக்கையும் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
மோசமான வானிலை காரணமாக பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும், தேவையற்ற வெளிப்புற பயணங்களைத் தவிர்க்குமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
