துளசி மருத்துவ பயன்கள்

துளசி மருத்துவ பயன்கள்

💦துளசி மூலிகைச் செடியாகும். இந்தியாஇ இலங்கை போன்ற நாடுகளில் காணப்படுகிறது.ஏறத்தாழ 50 சென்டி மீட்டர் வரை வளரக் கூடிய இச்செடியின் அனைத்துப் பாகங்களும் மருத்துவக் குணம் கொண்டவை. இது கோயிற் பூசைகளில் குறிப்பாக பெருமாள் கோயில்களில் பயன்படுத்தப்படுவதால் கோயிற் பூந்தோட்டங்களில் வழக்கமாகக் காணப்படுகிறது. வீடுகளில் துளசியை வளர்த்து வணங்கும் வழக்கமும் உண்டு.

துளசியின் மருத்துவ பயன்கள்

🥦துளசியானது மன அழுத்தத்திற்கு எதிரான குணங்களைக் கொண்ட ஒரு இயற்கை மூலிகையாகும். எனவே, ஒரு நபர் மன அழுத்தம் அல்லது கவலையை உணரும்போது ஒரு கப் துளசி டீயை பருகினால், புத்துணர்ச்சி பிறக்கும்.

🥦துளசி ஜீரண உறுப்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதன் மூலம் உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றி உடல் எடை குறைகிறது.

🥦துளசியில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள்இதாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் நிரம்பியுள்ளன.இது வயது முதிர்வு அறிகுறிகளை எதிர்த்து போராடுகிறது.இது உச்சந்தலையில் ஏற்படும் அரிப்புகளை குறைப்பதோடு, முடி உதிர்தலையும் கட்டுப்படுத்துகிறது.

🥦துளசி பேஸ்ட் சருமத்தில் ஏற்படும் கறைகள் மற்றும் முகப்பருவைப் போக்குகின்றது. இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளதால் முகச்சுறுக்கங்களை போக்கி சரும பிரச்சனை வராமல் பாதுகாக்கிறது.

🥦துளசி ஒரு சிறந்த நச்சு எதிர்ப்பு பொருள்.எனவே, சிறுநீரகற்களால்பாதிக்கப்படுபவர்களுக்கு இது அரு மருந்தாகும்.சிறுநீரக கற்களுக்கு காரணமான யூரிக் அமிலத்தின் அளவை குறைக்க உதவுகிறது.

🥦தினமும் காலையில் 10 துளசி இலையை மென்று வந்தால், இரத்தம் சுத்தியடையும். மார்பு வலிஇ தொண்டை வலி, வயிற்று வலி ஆகிய கோளாறுகள் நீங்கும்.

🥦துளசி இலையை எலுமிச்சை சாறு விட்டு நன்கு மை போல் அரைத்து அந்த விழுதை தோலில் தடவி வந்தால் படைச்சொரி மறையும்.

🥦உடலின் வியர்வை நாற்றத்தைத் தவிர்க்க குளிக்கும் நீரில் முந்தைய நாளே கொஞ்சம் துளசி இலையைப் போட்டு வைத்து அதில் குளித்தால் நாற்றம் நீங்கும். தோலில் பல நாட்களாக இருக்கும் படை, சொரிகளையும் துளசி இலையால் குணமடையச் செய்ய முடியும்.
🥦சுத்தமான செம்பு பாத்திரத்தில், கொஞ்சம் நல்ல தண்ணீரை ஊற்றி, அதில் ஒரு கைப்பிடி துளசியைப் போட்டு 8 மணி நேரம் மூடி வைத்து பின்பு அந்த நீரைக் குடிக்க வேண்டும். இதை வெறும் வயிற்றில் 48 நாட்கள் செய்து வந்தாலே எந்த நோயும் அண்டாது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்