அம்பாறை – தெஹியத்தகண்டிய, முவபதிகேவல, ஹுலங்பந்தனகல பிரதேசத்தில் உள்ள தனியார் தோட்டமொன்றில் துப்பாக்கி வெடித்ததில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெஹியத்தகண்டி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்தவர் வீரகெட்டிய, நாட்டிகதெனிய, கிராவெர பிரதேசத்தை சேர்ந்த டி.எச்.சுரேஸ் ஸ்ரீமால் (வயது – 35) எனத் தெரிவித்தனர்.
குறித்த நபர் தனியார் தோட்டமொன்றில் வேலை செய்து கொண்டிருந்த போது துப்பாக்கி இயங்கியதில் காயமடைந்து தெஹியத்தகண்டிய, வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக தெஹியத்தகண்டிய பொலிஸார் தெரிவித்தனர்.