துப்பாக்கி சூடு : ஒருவர் உயிரிழப்பு

அம்பாந்தோட்டை-ஹுங்கம திஸ்ஸ வீதி, ரன்ன பிரதேசத்தில் கட்டுமானப் பொருட்கள் விற்பனை செய்யும் கடையொன்றின் உரிமையாளர்  துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற குறித்த சம்பவத்தில், அதே பகுதியை சேர்ந்த 51 வயதுடைய நபர் உயிரிழந்துள்ளார்.

கட்டுமானப் பொருட்கள் விற்பனை செய்யும் கடை ஒன்றை நடத்தி வரும் இவர், நேற்று இரவு முதலாம் மாடியில் இருந்து கீழே இறங்கி வந்து கொண்டிருந்த போது துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக ஹுங்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்