ஜா-எல உஸ்வெட்டகெய்யாவ மோகன்வத்த கடற்கரையில் நேற்று வியாழக்கிழமை இரவு ரி-56 துப்பாக்கியால் இனந்தெரியாத ஒருவரால் உயிர் இழந்த நபர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
மேலும், உயிரிழந்தவர் கடவத்தை பகுதியைச் சேர்ந்த 29 வயதுடையவர் எனவும் என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
கொலைக்கான காரணம் குறித்து இதுவரை எந்த தகவலும் கிடைக்கப்பெறவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளதோடு மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.