துப்பாக்கிச் சூடு: ஒருவர் காயம்

கம்பஹா,ஹொரகொல்ல பிரதேசத்தில் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக நிட்டம்புவ பொலிஸார் தெரிவித்தனர்.

ஹொரகொல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதுடைய நபரொருவரே காயமடைந்துள்ளார்.

இவர் ஹொரகொல்ல பிரதேசத்தில் உள்ள காணி ஒன்றிற்குச் சென்றிருந்த போது இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர் வத்துபிட்டிவல ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வேட்டை துப்பாக்கியால் இந்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்