கண்டி, பேராதனை கிரிபத்கும்புர பிரதேசத்தில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றிலிருந்து பெறுமதியான பொருட்களை திருடிய உப பொலிஸ் பரிசோதகர் நேற்று ஞாயற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பேராதனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் உப பொலிஸ் பரிசோதகரே கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
சந்தேக நபரான உப பொலிஸ் பரிசோதகர் கிரிபத்கும்புர பிரதேசத்தில் உள்ள பல்பொருள் அங்காடிக்குச் சென்றுள்ளார்.
இதன்போது, பல்பொருள் அங்காடியில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கமராவை சோதனையிட்ட ஊழியர்கள் உப பொலிஸ் பரிசோதகர் தேயிலை பொதி மற்றும் அழகுசாதன பொருட்களை தனது ஆடைக்குள் மறைத்து வைப்பதைக் கண்டுள்ளனர்.
சந்தேக நபரான உப பொலிஸ் பரிசோதகர் திருடிய பொருட்களுடன் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
மேலும் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.