-கிண்ணியா நிருபர்-
திருகோணமலை நகர சபையானது மாநகரசபையாக தரமுயர்தப்பட்டு முதலாவது சபை அமர்வானது கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை பி.ப 2 மணியளவில் இடம்பெற்றது.
இதன் போது, இலங்கை தமிழசுக் கட்சியின் சார்பில் திருகோணமலை மாநகரசபை சிவபுரி வட்டாரத்தின் சார்பில் தெரிவு செய்யபட்ட கந்தசாமி செல்வராஜா, தேசிய மக்கள் சக்தி சார்பாக அபயபுர வட்டார தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் பதுகே தனுஸ்க ஜெயலத் ஆகிய இருவரின் பெயர்கள் பிரேரிக்கபட்ட சந்தர்ப்பத்தில் சபையில் இருந்த 25 உறுப்பினர்களும் திறந்த வாக்கெடுப்புக்கு கோரியதனால் திறந்த வாக்கெடுப்பு இடம்பெற்றது.
வாக்கெடுப்பில் இலங்கை தமிழரசு கட்சி சாரப்பில் பிரேரிக்கப்பட்ட கந்தசாமி செல்வராஜா 19 வாக்குகளையும் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் பதுகே தனுஸ்க ஜெயலத் 6 வாக்குகளையும் பெற்றார்.
அதனடிப்படையில் இலங்கை தமிழரசு கட்சியின் உறுப்பினர் கந்தசாமி செல்வராஜா திருகோணமலை மாநகரசபையின் முதல்வராக தெரிவு செய்யப்பட்டார்.
இதே வேளை உப முதல்வராக ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் உறுப்பினர் முகமட் மெளசூம் சபையில் ஏகமானதாக தெரிவு செய்யப்படார்.


Beta feature
