-கிண்ணியா நருபர்-
திருகோணமலை தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டி திருகோணமலை பிரதான வீதியின் 99 ஆம் கட்டை சந்தியை அண்மித்த பகுதியில் மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
குறித்த விபத்து சம்பவம் இன்று இடம் பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது 99 ஆம் கட்டை சந்தியை அண்மித்த பகுதியில் ஹோட்டல் ஒன்றில் இருந்து பிரதான வீதியின் வழியாக திருப்ப முயன்ற மோட்டார் சைக்கிளுடன் கந்தளாய் வீதியை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இவ் விபத்து சம்பவம் இடம் பெற்றுள்ளது.
இதில் பிரதான வீதி ஊடாக கந்தளாய் வீதியை நோக்கி பயணித்த 42 வயதான மோட்டார் சைக்கிள் ஓட்டுனஆர விபத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் சிறு காயங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
