-திருகோணமலை நிருபர்-
திருகோணமலை சிவன் கோயிலுக்கு அருகில் இன்று வியாழக்கிழமை முள்ளிவாய்க்கால் அவலத்தின் நினைவு தினம் அனுஷ்டிக்கப்படயிருந்த நிலையில் திருகோணமலை நீதிமன்றம் நிகழ்வை நடாத்த வேண்டாம் என தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
திருகோணமலை தலைமக பொலிஸ் நிலையத்தின் தலைமைப் பொலிஸ் பொறுப்பதிகாரி சமன் கே பியரன்ன தொடுத்த வழக்கின் கோரிக்கையை பரிசீலித்த திருகோணமலை நீதிமன்ற பிரதம நீதவான் பயாஸ் ரசாக் இவ்வுத்தரவை பிறப்பித்துள்ளார்.
இதன் அடிப்படையில் இன்று மாபெரும் நினைவுகள் நடைபெற உள்ளதாகவும் பொது சுகாதாரம் மற்றும் மனித உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் எந்த ஒரு நடவடிக்கைகளிலும் ஈடுபடுவதை தவிர்க்குமாறும், இனங்களுக்கு இடையில் மோதலை ஏற்படுத்தக்கூடிய எந்த ஒரு நடவடிக்கையிலும் ஈடுபடுவதை தவிர்க்குமாறும் குறித்த உத்தரவில் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் திருகோணமலை தமிழர் பேரவையின் தலைவர் ஆர்.ஜெரோம் ஆசிரியர் உட்பட யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் அழகராசா விஜயகுமார் உட்பட 13 பேருக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.