-திருகோணமலை நிருபர்-
திருகோணமலை-மயிலவெவ பகுதியில் காட்டு யானை தாக்கியதில் நபரொருவர் உயிரிழந்துள்ள நிலையில் மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் இருவரும் பயணித்துக் கொண்டிருந்த போது நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 3.00 மணியளவில் இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
இதில் பக்மீகம-அடம்பன பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான கே.சந்ரதாஷ (41வயது) சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இதேவேளை குறித்த நபருடன் பயணித்த அதே பகுதியைச் சேர்ந்த கே.பியசாந்த பண்டா (37வயது) என்பவர் காயமடைந்த நிலையில் கோமரங்கடவல பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்தார்.