திருகோணமலையில் மாபெரும் சக்திப்பொங்கல் நிகழ்வு

-மூதூர் நிருபர்-

சுவிட்சர்லாந்து பேர்ன் மேல்மருவத்தூர் அருள்மிகு ஆதிபராசக்தி சித்தர்பீடம் கல்வி சமூகநலம் பண்பாடு அறப்பணி மையத்தினால் திருகோணமலையில் மாபெரும் சக்திப்பொங்கல் நிகழ்வு நேற்று சனிக்கிழமை இடம்பெற்றது.

திருகோணமலை செல்வநாயகபுரம் இந்து மகா வித்தியாலத்தில் இடம்பெற்ற இந்தநிகழ்வு அறப்பணி மையத்தின் திருகோணமலை மாவட்ட பொறுப்பாளர் ஆசிரியர் சக்தி சரவணபவ ஆனந்தம் திருச்செந்தூரன் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளர் பொன்னம்பலம் தனேஸ்வரன் கலந்துகொண்டிருந்தார்.

சிறப்பு விருந்தினர்களாக கிராம சேவையாளர் செல்வி.சண்முகநாதன் சுகன்யா,சிரேஷ்ட ஊடகவியலாளர் அரசரெத்தினம் அச்சுதன், உப்புவெளி பொது நூலகத்தின்நூலகர் கனகசுந்தரம் வரதகுமார், அதிபர்களான வைரமுத்து மகேஸ்வரன், நாகராசா காளிராசா மற்றும் முன்னாள் உதவிக்கல்விப்பணிப்பாளர் ஆர்.எஸ்.ஜெறோம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதன்போது, 50 வறிய குடும்பங்களிற்கான பொங்கல் பொருட்களடங்கிய பொதிகளும்,13 அறப்பணியாளர்களுக்கான பொங்கல் பொருட்களடங்கிய பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டிருந்ததுடன், உதயபுரி பிரதேசத்தை சேர்ந்த சாதாரண தரத்தில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற இரு மாணவர்கள் கௌரவிக்கப்பட்டதுடன் தலா பத்தாயிரம் பெறுமதியான கல்விக்கான உதவியும் வழங்கி வைக்கப்பட்டிருந்தது.

சுவிட்சர்லாந்ததை சேர்ந்த சக்தி மதியழகன் நகுலேஸ்வரனின் நிதி அனுசரணையிலும் அறப்பணி மையத்தின் நிறுவனர் சக்தி சுவிஸ் சுரேஷ் சகோதரரின் ஏற்பாட்டிலும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.