-யாழ் நிருபர்-
யாழில் தாய் பேசவில்லை என இளம் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து எலிப்பாசனம் அருந்தி உயிரிழந்துள்ளார்.
குறித்த நபருக்கும் அவரது தாயாருக்கும் இடையே ஏற்பட்ட முரண்பாடு காரணமாக தாயார் அவருடன் சிலநாட்கள் பேசவில்லை. இதனால் மனமுடைந்த நபர் கடந்த 14ஆம் திகதி எலிப்பாசனம் அருந்தியுள்ளார்.
இந்நிலையில் அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
யாழ்ப்பாணத்தை சேர்ந்த தங்கராசா சதீஷ் (வயது 41) என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்த நிலையில் இவருக்கு 8 மாதங்கள் வயதான குழந்தை ஒன்றும் உள்ளது.
இவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார்.