💢“என்று பிறந்தவள் என்று உணராத இயல்பினளாம் எங்கள் தாய்” என்று தாய்மொழியின் தொன்மை பற்றி பாரதியார் கூறியுள்ளார்.
💢உலகில் பல ஆயிரகணக்கான மொழிகள் உள்ளன. அவற்றில் பழமையான மொழிகளுள் எமது தாய்மொழியாகிய தமிழ் மொழியும் ஒன்று. எமது தாய்க்கும் எமக்கும் எவ்வாறு நெருங்கிய பந்தம் உள்ளதோ அது போல தமிழ் மொழிக்கும் எமக்கும் அழகிய பந்தம் உள்ளது.
💢தன்னுடைய எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் பிறருக்கு வெளிப்படுத்துவதற்காக மனிதர்களால் தோற்றுவிக்கப்பட்டதே மொழி ஆகும். வாய்மொழியே முதலில் தோன்றியது அதன் பின்பு தான் எழுத்து மொழி தோன்றியது.
💢எமது தாய்மொழி தொன்மை காலம் முதலே நாகரீகம் நிறைந்த பேச்சு மொழியையும் எழுத்து இலக்கணங்களையும் இலக்கிய மரபுகளையும் கொண்டு காணப்படுகிறது. உள்ளத்து எண்ணங்களை உணர்ச்சி பூர்வமாக வெளிப்படுத்துவது எமது தாய்மொழியான தமிழ் மொழியாகும்.
◼ஒருவன் பிறந்தது முதலாக மனதில் உள்ளவற்றை சிந்திப்பதற்கும் அதனை பேசுவதற்கும் எழுதுவதற்கும் அடிப்படையாக இருப்பதே தாய்மொழி என்று சொல்லப்படுகின்றது. இதுவே அந்த மனிதனுக்கு ஓர் அடையாளத்தை வழங்குகின்றது.
◼உலகத்திலே எத்தனையோ மொழிகள் காணப்பட்டாலும் அவர் அவருக்கு தன்னுடைய தாய்மொழி மிகவும் உயர்வானது. தனது தாய்மொழியில் கற்பதும் தாய்மொழியில் பேசுவதும் அவர்களுக்கு சிறந்த உணர்வை ஏற்படுத்தும்.
◼தாய்மொழி மீதான் பற்று ஒவ்வொருவருக்கும் மிகவும் அவசியமானதாகும். எமது தாய்மொழியான தமிழ் பழமையானது பெருமை மிக்கது அழியாதது. இதனை போற்றி பாதுகாக்க வேண்டியது தமிழர்களாகிய எம் ஒவ்வொருவருடையதும் கடமையாகும்.
◼தமிழ் மொழி மீது பற்று கொண்ட சான்றோர்களை பட்டியலிட்டால் அது எண்ணிலடங்காதவை.திருவள்ளுவர், ஒளவையார், கபிலர், பரணர், கம்பர், சேக்கிழார், பாரதியார்இ பாரதிதாசன் என அன்று தொடக்கம் இன்றுவரை பல தமிழ் மீது அதீத பற்று கொண்ட படைப்பாளிகள் இருந்து கொண்டுதான் இருக்கின்றார்கள்.
◼எப்போதும் குழந்தைகள் தமது தாய்மொழியில் தான் கல்வி கற்க வேண்டும். அது தான் அவர்களது சிந்தனை திறனை வளர்க்கும் அவர்களை ஆக்கபூர்வமான பிரஜைகளாக உருவாக்கும். உலகத்தின் வளர்ந்த நாடுகள் தமது நாட்டு குழந்தைகளுக்கு தாய்மொழி மூலமாகவே கல்வியினை வழங்குகின்றன
◼அறிவையும் திறனையும் விருத்தி செய்து கொள்ள எமது தாய்மொழியில் கல்வி கற்பதனை நாம் எப்போதும் பெருமையாக கருத வேண்டும். மொழிகளின் மொழியாகிய நம் தாய்மொழியை காக்க வேண்டும். இந்த உணர்வு நம் அனைவருக்கும் வேண்டும்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்