திஸ்ஸமஹாராம கவுந்திஸ்ஸ புர பிரதேசத்தில் உள்ள கற்குழியில் நீரில் மூழ்கி தாய் மற்றும் இரண்டு பிள்ளைகள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நேற்று ஞாயிற்று கிழமை இரவு தாயின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாகவும், இரு பிள்ளைகளின் சடலங்களை தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் திஸ்ஸமஹாராம பொலிஸார் தெரிவித்தனர்.
32 வயதான தாய் மற்றும் 14 மற்றும் 9 வயதுடைய இரண்டு சிறுவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இந்த கற்குழியில் நேற்று பிற்பகல் தாயும் இரண்டு பிள்ளைகளும் நீராட சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்