தாயின் இளவயது காதலன் : மகளை அழைத்துக்கொண்டு வீட்டைவிட்டு தப்பியோட்டம்!

-பதுளை நிருபர்-

14 வயதுடைய சிறுமி ஒருவர் 23 வயதுடைய இளைஞன் ஒருவரினால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக, சந்தேகத்தின் பேரில் வவுனியா போகஸ்வெவ பொலிஸாரினால் குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதாக, கஹட்டருப்ப பொலிஸார் தெரிவித்தனர்.

சிறுமியும்,  சிறுமியின் சகோதரனும் பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்து வருவதாகவும், சிறுமியின் தாய் தந்தை கொழும்பில் நிறுவனம் ஒன்றில் காவல் கடமையில் ஈடுபட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது, தாய் மாத்திரம் விடுமுறையில் பதுளை கஹட்டருப்ப பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு திரும்புகையில், பேருந்தில் பயணிக்கும் போது 23 வயதுடைய இளைஞர் ஒருவருடன் உறவு ஏற்பட்டதாகவும்,  இதன்போது குறித்த இளைஞரையும் தனது வீட்டிற்கு அழைத்து சென்று வீட்டில் கணவன் மனைவி போல இருவரும் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், குறித்த பெண்ணின் 14 வயதுடைய மகளுடன் குறித்த இளைஞர் பாலியல் சேட்டைகளில் ஈடுபட்டு வந்ததாகவும், பெப்ரவரி மாதம் 14 ம் திகதி குறித்த பெண் பதுளை நகருக்கு சென்றிருந்த வேளையில் வீட்டிலிருந்த சிறுமியை குறித்த இளைஞன் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாகவும், பின்னர் சந்தர்ப்பம் ஏற்படும் நேரங்களில் குறித்த சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாகவும் பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

எதிர்பாராத விதமாக குறித்த சிறுமியின் தந்தை வீட்டிற்கு தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தும் போது குறித்த இளைஞரினால் தொலைபேசியில் பதிலளிக்கப்பட்டுள்ளது.

இதில் சந்தேகம் கொண்ட பெண்ணின் கணவர், கொழும்பு பொரளை பொலிஸ் நிலையத்தில் தனது மனைவியின் மீது புகாரளித்துள்ளார்.

முறைப்பாட்டினை ஏற்றுக் கொண்ட பொரளை பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரிக்குமாறு பதுளை தலைமையக பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதன்போது தலைமையக பொலிஸாரினால் விசாரணைகள் மேற்கொண்ட போதே மேற்குறிப்பிட்ட சம்பவம் அம்பலத்திற்கு வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

பதுளை பொலிஸார் குறித்த இளைஞனை கைது செய்ய முற்பட்ட வேளை இளைஞன் அங்கிருந்து தலைமறைவாகி உள்ளதாகவும், பின்னர் யாருக்கும் தெரியாமல் குறித்த சிறுமியையும் கூட்டிக் கொண்டு சென்று விட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கஹட்டருப்ப பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் தலைமையின் கீழ் ,குறித்த இளைஞனின் முகப்புத்தகம் மற்றும் கையடக்க தொலைபேசி அழைப்புகளை வைத்து விசாரணைகளை மேற்கொண்ட போது, சிறுமியும் ,சந்தேக நபரும் வவுனியா போகஸ்வெவ பகுதியில் தலைமறைவாகி இருப்பது தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியா போகஸ்வெவ பொலிஸாரின் உதவியுடன் சிறுமியையும் குறித்த இளைஞரையும் கைது செய்து, வவுனியா நீதிமன்றத்தில் கடந்த 5 ம் திகதி ஆஜர் படுத்திய போது, சந்தேக நபரை எதிர்வரும் 13 ம் திகதி பதுளை நீதிவான் நீதிமன்றில் ஆஜர் படுத்துமாறும் அதுவரையில் விளக்கமறியலில் வைக்குமாறும் சிறுமியை கஹட்டருப்ப பொலிஸாரிடம் ஒப்படைத்து வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்துமாறும் வவுனியா நீதிவான் உத்தரவிட்டுள்ளதாக பதுளை கஹட்டருப்ப பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

மேலதிக விசாரணைகளை கஹட்டருப்ப பொலிஸாரும் பதுளை தலைமையக பொலிஸாரும் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க