-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூளாய் பகுதியில் சிறுமி ஒருவர் தவறான முடிவு எடுத்து உயிரை மாய்த்துள்ளார்.
மூளாய் – ஆலடி பகுதியைச் சேர்ந்த அமிர்தலிங்கம் கீர்த்திகா (வயது 17) என்ற சிறுமியே இவ்வாறு உயிரை மாய்த்துள்ளார்.
குறித்த சிறுமி நேற்று திங்கட்கிழமை காலை கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்ய முயன்றுள்ளார் இதை அவதானித்த சிறுமியின் தாயார் ஓடிச்சென்று கயிற்றை அறுத்து அவசர நோயாளர் காவு வண்டியை அழைத்தார்
எனினும் சிறுமி உயிரிழந்துள்ளார்
சிறுமியின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.