அக்குரஸ்ஸ-திப்பட்டுவாவ பிரதேசத்தில் இன்று திங்கட்கிழமை காலை தலைத்துண்டிக்கப்பட்ட நிலையில் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் 70 வயதுடைய மாந்திரீகர் எனவும், குறித்த நபரை கொலை செய்தவர் அந்நபரின் தலையை துண்டித்து, அவரது வீட்டிற்கு அருகில் ஓடும் நில்வளா கங்கையில் வீசியுள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்துள்ள மாந்திரீகரின் வீட்டிற்கு அண்மையில் வசித்து வருபவரான கொலையாளி தற்போது அப்பிரதேசத்திலிருந்து தலைமறைவாகியுள்ளார்.
கொலைக்கான சந்தேசக நபரை கைது செய்யும் நடவடிக்கையை அக்குரஸ்ஸ பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.