புளத்சிங்கள, ஹல்வதுர, எபிடவத்த பகுதியில் இருவருக்கு இடையே ஏற்பட்ட கடுமையான வாக்குவாதத்தின் போது, தலைக்கவசத்தால் தாக்கப்பட்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புளத்சிங்கள, ஹல்வதுர பகுதியைச் சேர்ந்த மானகே சமன் பாலித (வயது – 50) என்ற நான்கு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிர் இழந்துள்ளார்.
தாக்குதல் நடத்தியவர் 23 வயதுடையவர் என்றும், இறந்தவரின் உறவினரை மணந்தவர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
புளத்சிங்கள பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.