திருகோணமலை தம்பலகாமத்தில் பஸ்ஸில் இருந்து தவறி விழுந்து பஸ் நடாத்துனர் பலியாகியுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது பாலம்போட்டாறு பகுதியை இணைக்கும் பொலிஸ் சோதனை சாவடியில் பிரதான வீதி அருகில் கண்டி திருகோணமலை வீதியில் உள்ள கோயில் உண்டியலில் திருகோணமலை கந்தளாய் வரையான தனியார் பஸ் சேவையில் ஈடுபடும் போது குறித்த பகுதியில் காணிக்கை போட்டு விட்டு மீண்டும் பஸ்ஸில் ஓடி சென்று ஏரிய போது தவறி விழுந்ததில் தலை அடிபட்ட நிலையில் இன்று வியாழக்கிழமை காலை உயிரிழந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரனை மூலம் தெரியவருகிறது.
இவ்வாறு உயிரிழந்த பஸ் நடாத்துனரான திருகோணமலை 5ம் கட்டை பகுதியை சேர்ந்த லலித் குமார (வயது 41) குடும்பஸ்தர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலையில் சடலம் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரனைகளை தம்பலகாமம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.