
தம்பலகாமத்துக்கு திருமலை மாவட்ட அரசாங்க அதிபர் அபிவிருத்தி மீளாய்வு தொடர்பில் களவிஜயம்
-கிண்ணியா நிருபர்-
திருகோணமலை தம்பலகாமம் பிரதேச செயலகப் பகுதியில் உள்ள அபிவிருத்தி திட்டம் மீளாய்வு தொடர்பான கண்காணிப்பு விஜயம் ஒன்றை திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாரச்சி மேற்கொண்டார்.
குறித்த அபிவிருத்தி மீளாய்வு மற்றும் கலந்துரையாடலானது தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி தலைமையில் இடம்பெற்றது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலம் அபிவிருத்திகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதி மூலமான மதிப்பீடு மற்றும் எதிர்கால திட்டங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டன.
இதன் போது வெளிக்கள கண்காணிப்பு விஜயம் ஒன்றையும் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் கண்காணிப்பு விஜயமானது குறித்த பிரதேச செயலகப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டது.
இதில் திருகோணமலை மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர், கணக்காளர், தம்பலகாமம் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்