-கிண்ணியா நிருபர்-
திருகோணமலை, தம்பலகாமம் பிரதேச செயலக மண்டபத்தில் நலிவுற்ற சமூகத்தை கட்டியெழுப்புவதற்கான விழிப்புணர்வு நிகழ்வொன்று தம்பலகாமம் பிரதேச செயலாளர் திருமதி ஜெயகௌரி அவர்களின் வழிகாட்டுதளுக்கிணங்க நேற்று வியாழக்கிழமை பிரதேச செயலக மண்டபத்தில் இடம் பெற்றது.
மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இடம் பெற்ற குறித்த நிகழ்வில் நலிவுற்றவர்களை பராமரித்தல் மற்றும் சமூக சேவைகள் திணைக்களம் ஊடான சேவைகள் தொடர்பான பல விடயங்கள் தெளிவூட்டப்பட்டது. மாவட்ட சமூக சேவைகள் உத்தியோகத்யர் ஹபீபுள்ளா வளவாளராக கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில், சமூக சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள், பெற்றார்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

