தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்திற்கு 11 மாவட்டங்களுக்கு மழை

தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணிநேரத்திற்கு 11 மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழையின் வேகம் குறைந்து, பெரும்பாலான பகுதிகளில் கடந்த சில நாட்களாக வறண்ட வானிலை காணப்படுகிறது. எனினும் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு தமிழ்நாட்டின் சில மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மழை தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில் கிழக்கிந்திய வங்கக்கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இந்த புதிய காற்றழுத்த தாழ்வால் தமிழ்நாட்டிற்கு அதிக மழையை எதிர்பார்க்க இயலாது. இருப்பினும் இந்த காற்றழுத்த தாழ்வையொட்டி, அடுத்த 3 மணிநேரத்திற்கு தமிழ்நாட்டின் 11 மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, திருவள்ளூர், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், சென்னை, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்