இலங்கைக்கான நிதியுதவி தவறாக நிர்வகிக்கப்படும் அபாயம் இருப்பதால், தற்போது இருக்கும் சூழலில் ஜப்பானால் உதவ முடியாது என கொழும்பில் உள்ள ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிடேகி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நேற்று வியாழக்கிழமை சந்தித்தபோது தெரிவித்தாக இன்று வெள்ளிக்கிழமை டெய்லி மிரர் செய்தி வெளியிட்டிருந்தது.
எனினும் குறித்த செய்தி தொடர்பாக ஜப்பான் தூதரகம் மறுப்பு தெரிவித்துள்ளது.
இத்தகைய கூற்றுக்கள் ஆதாரமற்றவை என எழுத்து மூலம் ஜப்பான் தூதரகம் பிரதமர் அலுவலகத்திற்கு தெரிவித்துள்ளது.
இன்று வெள்ளிக்கிழமை ஜப்பான் தூதுவர், ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவை சந்தித்ததாகவும், அந்த சந்திப்பில் ஜப்பான் தூதுவர் இலங்கைக்கான உதவிகளை வழங்க தயாராக இருப்பதாக தெரிவித்ததாகவும் ஜனாபதிபதி ஊடக பிரிவு அறிவித்துள்ளது.
இதேவேளை, இவ்வாறு வெளியான செய்திகளில் உண்மையில்லை என தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும், ஊடகத்தில் வெளியான செய்தியினை இலங்கைக்கான ஜப்பான் தூதரகம் மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.