தமிழகத்தின் இராமநாதபுரத்திலிருந்து இலங்கைக்குக் கடத்த முயன்ற சுமார் 3 கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியான யானை தந்தங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து கடல் வழியாக இலங்கைக்கு யானை தந்தங்கள் கடத்தப்படுவதாக, தமிழக பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.
அதற்கமைய, தீவிர தேடுதல் நடத்திய கீழக்கரை பொலிஸார், இலங்கைக்குக் கடத்த முயன்ற 4 கிலோ கிராம் எடையுடைய யானை தந்தங்களை இன்று திங்கட்கிழமை காலை பறிமுதல் செய்துள்ளனர்.
பறிமுதல் செய்யப்பட்ட யானை தந்தங்களின் பெறுமதி, இலங்கை ரூபாயில் சுமார் 3 கோடிக்கும் அதிகமாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த சம்பவம் தொடர்பாக மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது