-யாழ் நிருபர்-
கடற்படையினருக்கு காணி சுவீகரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் செய்தவர்களுக்கு கடற்படையினர் குளிர்பானம் வழங்கினர்.
நேற்று செவ்வாய்க்கிழமை காரைநகர் ஜே/45 கிராம சேவகர் பிரிவில் தனியாருக்கு சொந்தமான 40 ஏக்கர் காணியை கடற்படையினருக்கு அளப்பதற்கு நில அளவை திணைக்களத்தினர் வருகை தந்திருந்தனர்.
இதன்போது, அங்கு குழுமியிருந்த அரசியல் பிரமுகர்கள், சமூக மட்ட அமைப்புக்கள் மற்றும் பொதுமக்கள் அங்கு குழுமி இந்த காணி அளவீட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதன்போது, அங்கிருந்த கடற்படை வீரர்கள் அனைவருக்கும் குளிர்பானங்கள் வழங்கினர்.
எனினும் நில அளவை திணைக்களத்தினர் மாத்திரமே குளிர்பானங்களை பெற்றுக்கொண்டனர், ஏனைய எவரும் குளிர்பானங்களை பெற்றுக்கொள்ளவில்லை.
