-பதுளை நிருபர்-
பதுளை பிரதேசத்தில் புதையல் தோண்டிய நால்வர் பதுளை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.
தம்புல்ல பகுதியைச் சேர்ந்த 30,50 வயதுடைய நபர்கள் இருவரும், பல கொல்ல பகுதியை சேர்ந்த 21,27 வயதுடைய இருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
பதுளை வெவெல்ஹின்ன, பல கொல்ல பகுதியில் தனியார் ஒருவருக்கு சொந்தமான இடத்தில் புதையல் தோண்டுவதாக பதுளை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய குறித்த பகுதியை சுற்றிவளைத்த பதுளை பொலிஸார் சந்தேக நபர்கள் நால்வரையும் கைது செய்துள்ளதாக தெரிவித்தனர்.
சந்தேக நபர்களை பதுளை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதுடன் மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.