சீனாவை சேர்ந்த பெண் ஒருவர் தங்கப் பாத்திரத்தில் உணவு சமைத்து வெளியிட்ட காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
குறித்த பெண் வெளியிட்ட காணொளியில், அப்பாத்திரம் விற்பனைக்காக தயாரிக்கப்பட்டதாகவும், வாடிக்கையாளரிடம் அனுமதி பெற்று, தான் அப்பாத்திரத்தில் சமைத்து காணொளி வெளியிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
தங்கம் அதன் சிறந்த கடத்தல் திறனினால் துரிதமாக உணவை சமைக்க உதவுகிறது எனவும் ஆனால் சுவையில் எந்த மாற்றமும் இல்லை எனவும் அப்பெண் தெரிவித்துள்ளார்.
விற்பனைக்காக வைத்துள்ள குறித்த தங்கப் பாத்திரத்தின் விலை இலங்கை மதிப்பில் 3 கோடிக்கும் மேல் எனத் தெரிவிக்கப்படுகின்றது.