-மூதூர் நிருபர்-
தோப்பூர் – தங்கபுரம் தங்க விநாயகர் ஆலயத்தின் கும்பாபிசேக நிகழ்வின் இறுதிநாளான இன்று திங்கட்கிழமை பாற்குடப்பவணி இடம்பெற்றது.
பள்ளிக்குடியிருப்பு சிவசக்தி அம்மன் ஆலயத்திலிருந்து அடியார்கள் பாற்குடப்பவணியாக தங்க விநாயகர் ஆலயத்தை சென்றடைந்தனர்.
ஆச்சாரிய பெருமக்களின் மந்திரங்களுடனும், மேள வாத்தியங்கள் ஒலிக்க பாற்குடப் பவணி தங்கபுரம்-தங்க விநாயகர் ஆலயத்தை வந்தடைந்தது.
பாற்குடப் பவணியில் நூற்றுக்கணக்கான சைவ பக்த அடியார்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.