சாரதி அனுமதிப்பத்திர அட்டை விநியோகிப்பதில் தாமதம்

நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் நெருக்கடி காரணமாக சுமார் பத்து இலட்சம் சாரதி அனுமதிப்பத்திர அட்டை விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் அலுவலகம் தெரிவித்துள்ளது.

சாரதி அனுமதிப் பத்திரம் பெற்றுக்கொள்வதற்கான உரிய பரீட்சைகளில் சித்தியடைந்த சுமார் 3 இலட்சம் பேருக்கு இதுவரை சாரதி அனுமதிப் பத்திர அட்டைகள் வழங்கப்படவில்லை என அலுவலகத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் ஜெனரல் அலுவலகம் மாதத்துக்கு சுமார் 60 ஆயிரம் சாரதி அனுமதி பத்திரங்களை வழங்குவதாகவும், டிசம்பர் 2021 முதல் புதிய சாரதி அனுமதி பத்திரங்களை அச்சிட்டு வழங்க முடியவில்லை குறிப்பிட்டுள்ளார்.