டெங்கு ஒழிப்பு கட்டுரை

டெங்கு ஒழிப்பு கட்டுரை

டெங்கு ஒழிப்பு கட்டுரை

🔲டெங்கு என்பது கொசுக்களால் பரவும் ஒரு வைரஸ் நோயாகும். இது சமீபத்திய ஆண்டுகளில் உலகின் பல்வேறு பகுதிகளில் வேகமாக பரவி வருகிறது. டெங்கு வைரஸ் குறிப்பாக ஏடிஸ் அல்போபிக்டஸ் என்ற கொசுக்கள் மூலமே பரவி வருகிறது. பொதுவாக இப்பிரச்சனையை நாம் நமது சுற்றுசூலை சுத்தமாக வைத்திருப்பதன் மூலம் கட்டுப்படுத்த முடியும்.

🔲இன்றைய நாட்களில் சுகாதார ரீதியாக மனிதன் எதிர்கொள்ளும் பாரிய பிரச்சனைகளில் டெங்கு காய்ச்சலும் ஒன்றாகும். இது உலகம் முழுவதிலும் பரவிக் காணப்படும் ஒரு விதமான உயிர் கொல்லி நோய் ஆகும்.

🔲ஏடிஸ் வைரஸ்கள் முதலில் ஆபிரிக்க கண்டத்தில் உருவானது. ஆனால் இப்போது உலகெங்கிலுமுள்ள அனைத்து வெப்ப மண்டலப் பகுதிகளிலும் காணப்படுகிறது. ஏறக்குறைய நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளிலுள்ள மக்கள் இதனால் பாதிக்கப்படுகின்றனர்.

டெங்கு காய்ச்சல் அறிகுறிகள்

🦠டெங்கு நோய் அறிகுறிகள் கொசு கடித்து 4 முதல் 9 நாட்களில் பின்புதான் தெரியும். இந்நோய் தொற்றியவர்களுக்குக் கடுமையான காய்ச்சல்⸴ தலைவலி⸴ கண்ணுக்கு பின்னால் வலி ஏற்படல்⸴ தசைகள் மற்றும் மூட்டுகளில் கடுமையான வலி ஏற்படும்⸴ வாந்தி⸴ குமட்டல்⸴ உடற் சோர்வு⸴ உடல் அரிப்பு போன்ற பல அறிகுறிகள் தென்படும். இவ்வகையான அறிகுறிகள் தோன்றினால் உடனடியாக மருத்துவரிடம் சென்று  சிகிச்சை பெறுவதனால் பிரச்சனையை கட்டுப்படுத்த முடியும்.

🦠இதன் நோய்நிலை அதிகரிக்கும் பட்சத்தில் மனித உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து காய்ச்சல் அதிகரித்து மரணம் நிகழ வாய்ப்புண்டு ஆகவே இது தொடர்பாக நாம் விழிப்பாக இருக்க வேண்டும்.

டெங்கு காய்ச்சலை சரி செய்யும் வழிகள்

🦠குருதிச்சிறுதட்டுக்கள் இக்காய்ச்சலின் மூலம் குறைவதால் தினமும் பப்பாளி இலைச் சாற்றை குடிப்பது நன்று. கடுமையான காய்ச்சல்⸴ வாந்தி ஏற்படுவதனால் உடலில் நீர்ச்சத்துக் குறையும். எனவே நீர்ச்சத்து குறையாமல் தடுக்க சுத்தமான குடிநீர் மற்றும் நீர்ச்சத்துள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

🦠டெங்கு காய்ச்சல் உள்ளவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் தொடர்ந்து நிலவேம்புக் கசாயம் குடித்து வந்தால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம். மேலும் இவற்றுடன் நல்ல ஓய்வு எடுத்துக் கொள்வது மிக அவசியமாகும்.

டெங்கு பரவாமல் தடுக்கும் வழிகள்

🦠டெங்கு பிற கொசுக்களை போல் அல்லாது நன்னீரில் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யும் கொசுவாக காணப்படுகின்றது. இதனால் சுற்றுப்புற சூழலில் மழை நீர் தேங்கி நிற்க கூடிய வகையிலான இளநீர் கோம்பைகள்இ வெற்றுப் போத்தல்கள்இ பிளாஸ்டிக் பைகள்இ சிரைட்டைகள்இ டயர்கள் போன்றவற்றை இல்லாமல் செய்வதுடன் நாம் வாழும் சூழலை கொசு பெருக்கம் இல்லாத சூழலாக மாற்றுவது தான் இதற்கான சிறந்த தடுப்பு நடவடிக்கையாகும்.

மேலும் தூங்கும் போது கொசு வலையை பயன்படுத்தலாம், கொசுவை விரட்டும் பொருட்களை பயன்படுத்தலாம், நோய் தொற்று ஏற்பட்டதை உணர்ந்தால் உடனடியாக மருத்துவ சிகிச்சையினை பெறுதல், நோய் எதிர்ப்பு சக்தியுள்ள உணவுகளை உண்ணல் மற்றும் நிறைய நீர் அருந்துதல் போன்ற மருத்துவ ஆலோசனைகளை பின்பற்றுவதனால் இந்நோயில் இருந்து நம்மை பாதுகாக்கலாம்.

முடிவுரை

🦠டெங்கு நோயைத் தடுக்க உலகெங்கிலும் ஆராய்ச்சிகள் மேற்கொண்டு வரப்படுகின்றன எனினும் தற்போது வரை மருந்துகள் கிடைக்கப் பெறவில்லை. எனினும் நோயினுடைய ஆரம்ப நிலையிலே அதனை குணமாக்க முடியும்.

🦠இதற்கு டெங்கு ஒழிப்பு நடடிக்கைகளை முறையாக பின்பற்ற வேண்டும். சுற்றுச்சூழல் தொடர்பில் அதிக கவனத்துடன் இருக்கும் போது தானாகவே இந்நோயினை குறைத்துக் கொள்ள முடியும். அழகான வாழ்க்கையை சிதைக்கும் நோய்களில் இருந்து பாதுகாப்பாக இருப்போம்.

டெங்கு ஒழிப்பு கட்டுரை

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்