ஐக்கிய ராஜ்ஜியத்தின் உணவுத் தரங்களை பூர்த்தி செய்யத் தவறியதால், டுபாய் ஸ்டைல் சொக்லேட் என்ற சொக்லேட்டை, ஒவ்வாமை உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும், என்று ஐக்கிய ராஜ்ஜியத்தின் உணவுப் பாதுகாப்பு கண்காணிப்பு அமைப்பு எச்சரித்துள்ளது.
பிஸ்தா, தஹினி மற்றும் துண்டாக்கப்பட்ட ஃபிலோ பேஸ்ட்ரி ஆகியவற்றால் நிரப்பப்பட்ட இந்த பிரபலமான சொக்லேட் பார்கள், கடந்த ஆண்டு அதிகளவில் பிரபலமானது
இருப்பினும், உணவு தரநிலைகள் நிறுவனம், ஐக்கிய ராஜ்ஜியத்தில் முக்கியமான பாதுகாப்பு மற்றும் லேபிளிங் விதிமுறைகளுக்கு இணங்காத பல பொருட்களைக் கண்டறிந்துள்ளது.
சில தயாரிப்புகளில், லேபிளில் அறிவிக்கப்படாத வேர்க்கடலை மற்றும் எள் இருப்பதை நாங்கள் கண்டறிந்துள்ளோம், என உணவு தரநிலைகள் நிறுவனத்தின் கொள்கை இயக்குனர் ரெபேக்கா சுட்வொர்த் தெரிவித்துள்ளார்.
இந்த சொக்லேட் பார்களை வாங்குவது ஒவ்வாமை உள்ள நுகர்வோருக்கு ஆபத்தானது, என்று உணவு தரநிலைகள் நிறுவனம் வலியுறுத்தியது.
தற்போது விற்பனையில் உள்ள தயாரிப்புகள் உணவுப் பாதுகாப்பு தரங்களை பூர்த்தி செய்வதை சரிபார்க்க கண்காணிப்பு அமைப்பு இப்போது அவற்றின் மாதிரித் தரவை மதிப்பாய்வு செய்து வருகிறது.
“ஒவ்வாமை உள்ளவர்கள் டுபாய் ஸ்டைல் சொக்லேட் என்ற சொக்லேட்டை சாப்பிடக்கூடாது”, ஒவ்வாமை உள்ள ஒருவருக்கு நீங்கள் பரிசை வாங்குகிறீர்கள் என்றால், இந்த தயாரிப்புகளை வாங்குவதைத் தவிர்க்க வேண்டும் என்பதே எங்கள் ஆலோசனை, இதில் வேர்க்கடலை மற்றும் எள் மட்டுமல்ல, அனைத்தும் ஒவ்வாமையை உருவாக்கும், என உணவு தரநிலைகள் நிறுவனத்தின் கொள்கை இயக்குனர் ரெபேக்கா சுட்வொர்த் தெரிவித்துள்ளார்.
ஒவ்வாமை இல்லாதவர்கள் இந்த தயாரிப்புகளை உட்கொள்ளலாம், எனினும் ஒரிஜினல் தயாரிப்புகளை வாங்குவதை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறும் நுகர்வோர் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
