டித்வா சூறாவளியினால் சேதமடைந்த வீதிக் கட்டமைப்புகளைப் புனரமைத்து மேம்படுத்துவதற்காக சுமார் 3.33 பில்லியன் ரூபாய் பெறுமதியான மூன்று ஒப்பந்தங்களுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அமைச்சரவைத் தீர்மானத்தின்படி, சேதமடைந்த பல்வேறு வீதிப் பகுதிகளைச் சீரமைப்பதற்கான ஒப்பந்ததாரர்களைத் தெரிவுசெய்ய தேசிய போட்டி கொள்வனவு நடைமுறையின் கீழ் விலைமனுக்கள் கோரப்பட்டன.
விலைமனுக்கள் மதிப்பீடு செய்யப்பட்டு, உயர்மட்ட கொள்வனவு குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி, முதலாவது ஒப்பந்தம் 852.83 மில்லியன் ரூபாய் பெறுமதியில் M/s ELS Construction (Pvt) Ltd நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
இதன் கீழ், கம்பளை – நாவலப்பிட்டி (B013) வீதியின் 8+500 கிலோமீற்றர் முதல் 16+300 கிலோமீற்றர் வரையிலான பகுதியும், உலப்பனை – புசல்லாவ (B431) வீதியின் 0+000 கிலோமீற்றர் முதல் 6+440 கிலோமீற்றர் வரையிலான பகுதியும் புனரமைத்து மேம்படுத்தப்படவுள்ளன.
இந்த ஒப்பந்தத்திற்கான பணிகள் நான்கு மாதங்களுக்குள் நிறைவு செய்யப்பட வேண்டும்.
இதற்கிடையில், 1,516.08 மில்லியன் ரூபாய் பெறுமதியான இரண்டாவது ஒப்பந்தம் M/s Jayasinghe Contractors (Pvt) Ltd நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
இதன் கீழ், B461 வீதியின் 11+000 கிலோமீற்றர் முதல் 27+700 கிலோமீற்றர் வரையிலான 16.77 கிலோமீற்றர் நீளமான வீதிப் பகுதி புனரமைத்து மேம்படுத்தப்படவுள்ளது.
மேலும், 27+700 கிலோமீற்றர் முதல் 30+800 கிலோமீற்றர் வரையிலான பகுதியில் வடிகால் கட்டமைப்பின் செயற்திறனை மேம்படுத்துதல் மற்றும் தாங்குச் சுவர்களை நிர்மாணித்தல் உள்ளிட்ட பணிகளும் முன்னெடுக்கப்படவுள்ளன.
இந்த ஒப்பந்தத்திற்கான பணிகள் இரண்டு மாதங்களுக்குள் நிறைவு செய்யப்பட வேண்டும்.
மூன்றாவது ஒப்பந்தம் 965.37 மில்லியன் ரூபாய் பெறுமதியில் M/s RR Construction (Pvt) Ltd நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
இதன் கீழ், கட்டுகஸ்தோட்டை – மடவளை – பம்பரல்ல (B205) வீதியின் 19ஆவது கிலோமீற்றர் முதல் 34ஆவது கிலோமீற்றர் வரையிலான 15 கிலோமீற்றர் நீளமான பகுதி புனரமைத்து மேம்படுத்தப்படவுள்ளது.
அத்துடன், வத்தேகம – கந்தேனுவர – வாரியபொல வீதியின் முதலாவது கிலோமீற்றர் முதல் ஐந்தாவது கிலோமீற்றர் வரையிலான நான்கு கிலோமீற்றர் பகுதியில் சேதமடைந்த வீதிப் பகுதிகள் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட இடங்களைச் சீரமைக்கும் பணிகளும் இந்த ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இந்த ஒப்பந்தத்திற்கான பணிகள் மூன்று மாதங்களுக்குள் நிறைவு செய்யப்பட வேண்டும்.
இந்த மூன்று ஒப்பந்தங்களினதும் மொத்த பெறுமதி 3,334.28 மில்லியன் ரூபாயாகும். இதில் பெறுமதி சேர் வரி (VAT) மற்றும் ஏனைய பொருந்தக்கூடிய வரிகள் உள்ளடக்கப்படவில்லை.










