ஜப்பான் அரசாங்கத்தின் அழைப்பின் பேரில், தற்போது ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, இன்று ஞாயிற்றக்கிழமை பிற்பகல் டோக்கியோவில் ஜப்பானில் வசிக்கும் இலங்கை சமூகத்தினரை சந்திக்க உள்ளார்.
ஜனாதிபதி தனது மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை தொடங்கி நேற்று சனிக்கிழமை ஜப்பான் வந்தார்.
இலங்கைக்கு வருகை தந்த அவரை, இலங்கைக்கான ஜப்பான் தூதர் அகியோ இசோமாட்டா, ஜப்பானுக்கான இலங்கை தூதர் பேராசிரியர் பிவிதுரு ஜனக குமாரசிங்க மற்றும் ஜப்பான் வெளியுறவு அமைச்சின் மூத்த அதிகாரிகள் அன்புடன் வரவேற்றனர்.
நேற்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம் மற்றும் ஜப்பானில் உள்ள இலங்கை தூதரகம் ஆகியவற்றால் ஏற்பாடு செய்யப்பட்ட “எக்ஸ்போ 2025” இன் ஒரு பகுதியாக ஒசாக்காவில் நடைபெற்ற “இலங்கை தின” கொண்டாட்டங்களில் பிரதம விருந்தினராகவும் பங்கேற்றார்.