தற்போதைய அரசாங்கத்தை உடனடியாக வெளியேறுமாறு வலியுறுத்தி நேற்று சனிக்கிழமை நாடளாவிய ரீதியில் வீதிகளில் இறங்கிய மக்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து பொலிஸ் தடுப்புகளை உடைத்து ஜனாதிபதி மாளிகைக்கள் போராட்டக்காரர்கள் நுழைந்தனர்.
பொதுமக்கள் ஜனாதிபதி மாளிகையில் உல்லாசமாக இருப்பது போன்ற காணொளிகள் பல சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.
சிலர் ஜனாதிபதியின் இல்லத்தின் நீச்சல் குளத்தில் இறங்கி குளித்தனர், மேலும் சிலர் ஜனாதிபதியின் இல்லத்தின் சமையலறைக்குள் நுழைந்து உணவு சமைத்தனர்.
இதேவேளை, ஜனாதிபதி மாளிகையில் இருந்து கிட்டத்தட்ட ஒன்றரை மில்லியன் ரூபா பணத்தை மக்கள் கண்டு பிடித்துள்ளனர்.
மூட்டையாகக் கட்டப்பட்டிருந்த 5000 ரூபாய் நோட்டுகளை போராட்டக்காரர்கள் எண்ணுவது போன்ற காணொளி சமூகவலைத்தளங்களில் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.