ஜனாதிபதி மக்களின் கோரிக்கைகளை புரிந்து கொள்ள தவறிவிட்டார்

அமைச்சரவை அமைச்சுப் பதவிகளை ஏற்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ சகல கட்சிகளுக்கும் விடுத்த அழைப்பை மக்கள் விடுதலை முன்னணி நிராகரித்துள்ளது.

எந்தவொரு சூழ்நிலையிலும் இடைக்கால, குறுகிய கால அல்லது சர்வகட்சி அரசாங்கக் கட்டமைப்பை உருவாக்குவதற்கு ஜனாதிபதி அல்லது பிரதமருடன் ஜே.வி.பி இணைந்து கொள்ளமாட்டாது என தெரிவித்த அக்கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, முதலில் ஜனாதிபதி தனது பதவியிலிருந்து விலக வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மக்களின் கோரிக்கைகளை புரிந்து கொள்ள தவறிவிட்டார் எனவும், தற்போதைய நெருக்கடியானது அமைச்சுப் பதவிகள் தொடர்பான பிரச்சினையல்ல எனவும் அவர் தெரிவித்தார். இவ்வாறான பிரேரணையை முன்வைப்பதற்கு ஜனாதிபதிக்கு நியாயமான காரணங்கள் எதுவும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.