ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியால் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப்பிரேரணை மீது பாராளுமன்றத்தில் எதிர்வரும் 17 ஆம் திகதி விவாதம் நடத்தப்படவுள்ளது.
சபாநாயகர் மஹிந்தயாப்பா அபேவர்தன தலைமையில் இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பிரேரணை நிறைவேறினால்கூட ஜனாதிபதியை பதவி நீக்கம் செய்யமுடியாது. எனினும், ஜனாதிபதி மீது பாராளுமன்றத்தின் அவநம்பிக்கையை அதன் மூலம் வெளிப்படுத்தலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.