கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு தொடர்பாக பொலிஸாரை தவறாக வழிநடத்தியதாகவும், தவறான தகவல்களை வழங்கியதாகவும் கூறப்படும் சந்தேக நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மாத்தறை திக்வெல்ல பகுதியை சேர்ந்த லஹிரு சம்பத் சமரந்த என்ற நபரே இவ்வாறு கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினரால் வைது செய்ப்பட்டுள்ளார்.
கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு தொடர்பாக பொலிஸாரால் நாடளாவிய ரீதியல் தேடப்பட்டு வரும் இஷார செவ்வந்தி என்ற சந்தேக நபர் தொடர்பில் கைது செய்யப்பட்டிருக்கு சந்தேக நபர் திக்வெல்லவில் குறிப்பிட்ட இடத்தில் இஷார செவ்வந்தி பதுங்கியிருப்பதாக பொலிஸாருக்கு பொய்யான தகவல் வழங்கியுள்ளார்.
இருப்பினும், விசாரணைகளில் இந்த தகவல் பொய்யானது என்பது தெரியவந்தது.
இந்நிலையில் பொய்யான தகவல்களை வழங்கி பொலிஸாரை திசைதிருப்ப முயன்ற குற்றச்சாட்டில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டு கொழும்பு நீதவான் ஹர்ஷன கெக்குனவெல முன்னிலையில் ஆஜர்படுத்திய நிலையில் சந்தேக நபரை மார்ச் மாதம் 24ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.