மடிக்கணினி உள்ளிட்ட உபகரணங்களுடன் அக்குரேகொட பகுதியில் கைது செய்யப்பட்ட 11 இந்திய பிரஜைகளையும் நாடு கடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் அனைவரும் கடுவெல நீதவான் நீதிமன்றத்தில்நேற்று (07) ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது .
சந்தேகநபர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது .
விமானப்படையின் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கமைய, அக்குரேகொட பகுதியில் வாடகை வீடொன்றில் தங்கியிருந்த நிலையில் கடந்த 4 ஆம் திகதி இந்தியர்கள் 11 பேரும் கைது செய்யப்பட்டனர் .
கைது செய்யப்பட்டவர்களில் 03 பெண்களும் அடங்குகின்றனர்.
இணையத்தளம் வழியாக சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர்கள் கைது செய்யப்பட்டனர் .