-கிண்ணியா நிருபர்-
திருகோணமலை குச்சவெளி பிரதேச செயலக பகுதியில் ஏற்பட்ட கடும் சுழல் காற்றினால் தனியார் கல்வி நிலையத்துடன் இணைந்த வீடொன்று நேற்று திங்கட்கிழமை மாலை சேதமாக்கப்பட்டுள்ளன.
குச்சவெளி அந்நூரியா பாடசாலைக்கு அருகாமையில் உள்ள தனியார் கல்வி நிலையம் மற்றும் வீடும் இதன் போது சேதமாக்கப்பட்டன.
இதில் வீட்டின் கூரைகள் காற்றினால் வீசப்பட்டோடு உபகரணங்களும் சேதமாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த வீட்டு உரிமையாளரின் மூன்று பிள்ளைகளில் ஒரு பிள்ளை காயமடைந்துள்ளதாகவும் ஏனைய இருவரையும் அனர்த்தத்தில் இருந்து மீட்டெடுத்ததாகவும் உரிமையாளர் தெரிவித்தார்.
கடும் காற்றுடன் கூடிய கனமழை காரணமாக இவ் அனர்த்தம் ஏற்பட்டுள்ளது, மோட்டார் சைக்கிள் உட்பட வீட்டு தளபாடங்கள் மின்சார உபகரணங்களும் சேதமாகியுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ பிரிவு உள்ளிட்ட தொடர்பான அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

