ஆஸ்திரியா நாட்டு பெண்ணிடம் இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டில் 3 பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வௌிநாட்டு சிகரெட்டுகள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காக குறித்த ஆஸ்திரியா சுற்றுலாப் பயணியிடம் 50,000 ரூபா இலஞ்சம் கோரியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வரும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மூவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.