நிலவும் பாதகமான வானிலை காரணமாக சுற்றுலாப் பயணிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து தெரிவிக்க வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை, அவசரப் பிரிவு தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சுற்றுலாப் பயணிகள் எதிர்கொள்ளும் அவசரநிலைகள் தொடர்பாக நிவாரண சேவைகளை ஒருங்கிணைக்க இந்த எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை , சுற்றுலா தொடர்பான விசாரணைகளுக்காக 1912 என்ற உதவி எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளது.
சுற்றுலாப் பயணிகள் நோயாளர் காவு வண்டி மற்றும் மருத்துவ அவசர எண்ணான 1990 என்ற இலக்கத்தையும் பயன்படுத்தலாம்.
அத்தோடு, 1912 என்ற எண்ணை அழைப்பதன் மூலம், சுற்றுலா தகவல், பொது வழிகாட்டுதல் மற்றும் சுற்றுலா காவல்துறையைத் தொடர்புகொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் கொழும்பு சுற்றுலா காவல் தலைமையகத்தை தொடர்பு கொள்ள +94 11 242 1052 என்ற தொலைபேசி இலக்கத்தை பயன்படுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
