சுப்பர் ஓவரில் பாகிஸ்தானை வீழ்த்தியது அமெரிக்கா

ஐசிசி இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக நேற்று வியாழக்கிழமை  இடம்பெற்ற போட்டியில் அமெரிக்க அணி வெற்றி பெற்றுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அமெரிக்க அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 159 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

இதன்படி 160 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய அமெரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுக்களை இழந்து 159 ஓட்டங்களைப் பெற்றமையினால் போட்டி சமநிலையில் முடிவடைந்தது.

இந்த நிலையில் வெற்றியாளரை தீர்மானிப்பதற்காக சுப்பர் ஓவர் நடத்தப்பட்டது.

அதில் முதலில் துடுப்பெடுத்தாடிய அமெரிக்க அணி 18 ஓட்டங்களைப் பெற்றது.

எவ்வாறாயினும் சுப்பர் ஓவரில் பதிலளித்தாடிய பாகிஸ்தான் அணி 13 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியைத் தழுவியது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க