புறக்கோட்டை மொத்த சந்தையில் வெள்ளை சீனியின் மொத்த விலை சடுதியாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த இரு தினங்களுக்கு முன்னர் 255 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் வெள்ளை சீனியின் மொத்த விற்பனை விலை தற்போது 275 ரூபாவிலிருந்து 280 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.
அதன்படி ஒரு கிலோகிராம் வெள்ளை சீனியின் மொத்த விலை 20 முதல் 25 ரூபா வரையில் அதிகரித்துள்ளமை தெரியவந்துள்ளது.
எனினும் சீனி விலை அதிகரிப்பு தொடர்பில் அத்தியாவசிய உணவு பொருள் இறக்குமதியாளர்கள் சங்கம் எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது